மதுரையை அதிர வைத்த ‘விருமன் ‘படக்குழு.சூர்யா ,கார்த்தியின் ஆடி பெருக்கு !

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில்,
கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’.

ஆடி பெருக்கின் போது மதுரையில்  அமர்க்களமாக ‘விருமன் ‘படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுகிறார்கள்.  சூர்யா சகோதரர்களின் புதிய கோட்டையாக மதுரை மாநகரம் மாறியிருக்கிறது என்பதன் எதிரொலிதான் இந்த விழா.

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் 3ம் தேதி நடக்கிறது.

மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் – பாவனியும் நடனமாடுகின்றனர்.

கார்த்தி, அதிதி சங்கர், மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி ,வசுமித்ரா ,நந்தினி ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். 

 

அதிதி ஷங்கர்கற்பூர சுந்தர பாண்டியன்கார்த்திசரண்யாசூர்யாஜான்சன் பிஆர் ஓபிரகாஷ் ராஜ்முத்தையாயுவன் சங்கர் ராஜாவிருமன்