Dharma Durai is a 2016 Indian Tamil drama film directed by Seenu Ramasamy. The film stars Vijay Sethupathi and Tamannaah in the lead roles, with Aishwarya Rajesh, Srushti Dange, Raadhika Sarathkumar, Ganja Karuppu and Rajesh in supporting roles.
RATING;4/5.
வித்தியாசமான கதைக்களத்தோடு சாதாரண கிராமத்து மக்களின் வாழ்வியலை மிக அழகியல் கலந்து யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்யும் சீனு ராமசாமி இப்படத்திலும் அதை மிக அனாசயமாக கையாண்டுள்ளார்.சபாஷ்! ஒரு அழகான காதல் கதை,கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பங்களிப்பு,‘வரதட்சணை’ என்ற பெயரில் ஏழைப் பெண்கள் படும் துயரம், எனப் பல விஷயங்களைப் பேசுகிறான் தர்மதுரை. அதே சமயம் ஃபிளாஷ்பேக் காட்சிகள் எப்போது முடியுமோ என்ற சோர்வையும் ஏற்படுத்துகிறது. நீளத்தை குறைத்து தவிர்த்திருக்கலாம். கல்லூரிக் காட்சிகளில் புதுமை எதுவும் இல்லை.விஜய் சேதுபதி நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்.அவரின் இயல்பான நடிப்பும், அப்பாவித்தனமான முகபாவனைகளும் அந்த கேரக்டருக்கு கனகச்சிதம். தர்மதுரை குடிகாரனாக மாறியதன் பின்னணி, தமன்னாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையேயான நட்பு காதலாகும் காட்சி, அழகுகவிதை. பாண்டியம்மா ராதிகா கிழக்கு சீமையிலே படத்திற்கு பிறகு இப்படத்தில் கைதட்டல் பெறுகிறார். தமன்னா தான் ஒரு அழகு பதுமை மட்டும் இல்லை வலுவான கேரக்டர் கிடைத்தால் என்னால் நடிக்கவும் முடியும் என பல இடங்களில் சவால் விடுகிறார். கல்லூரி பேராசிரியராக வரும் நடிகர் ராஜேஷ் மனதில் நிற்கிறார் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, படத்துக்குப் பெரிய பலம். ‘மக்கா கலங்குதப்பா’ பாடல் தனித்துவம் பெறுகிறது. வைரமுத்துவின் வரிகள் பளிச்சிடுகின்றன. சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. மொத்தத்தில் ‘தர்மதுரை’ படத்தின் திரைக்கதையும், கேரக்டர்களும் திரையரங்கை விட்டு நாம் வெளியேறிய பின்பும் நம் நெஞ்சங்களை விட்டு விலக மறுக்கின்றனர்.