செவாலியே கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த்வாழ்த்து!

பிரான்ஸ் அரசு நேற்று நடிகர்கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கி கெளரவித்த நிலையில், ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அவர் கூறியிருப்பதாவது: எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி மற்றும் ​​நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று செவாலியர் விருது பெற்றுள்ள உலகநாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் அவரிடம் உடல் நலம் பற்றியும் விசாரித்தனர்.  செவாலியே திரு.கமல் ஹாசனுடன் நடிகர் சங்க ​ பொருளாளர் கார்த்தி ,​​பொது செயலாளர் விஷால்​,​​ செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார் , நந்தா , ​ ஸ்ரீமன்​,A.L.உதயா ​​ ​மற்றும் நியமன குழு உறுப்பினர் ஹேம சந்திரன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment