ட்ருலி மீடியா அண்ட் என்டர்டெய்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ரோஷன் நசீர் மற்றும் கணேஷ் தேசிங் இணைந்து தயாரித்திருக்கும் புதிய வீடியோ ஆல்பம் ‘டேஞ்சர் குயின்’. நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி, ஆடி பாடி நடித்திருக்கும் இந்த ஆல்பத்தில் அவருடன் பஞ்சாப்பை சேர்ந்த மாடலிங் மங்கையும், நடிகையுமான விசாகா தீமன் நடித்திருக்கிறார்.
இதனிடையே நடிகை விசாகா தீமன் துருவ் விக்ரம் இசையமைத்து வெளியிட்ட ‘காயம்’ எனும் ஒரு நிமிட வீடியோ இசை ஆல்பத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.