அதிகம் பேச தடை இருந்தும் மேடை அதிரப்பேசிய டி .ஆர்.!

 

தமிழ்ச்  சினிமாவில் புதிய பிறவி எடுத்து வந்திருப்பவர் சிலம்பரசன். அதாவது தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார். பேச்சு ,செயல் ,உருவம் உள்பட அணுகுமுறை எல்லாமே புதுமை  ! புதுமை.! புதுமை.!

 சிலம்பரசன். நடிப்பில்  வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் பத்து தல.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்தான் பத்து தல.  இந்தப்படத்தில் ஏ ஜி.ராவணன்  என்கிற கேரக்டரில் அண்ணன் சிலம்பரசன் நடித்திருக்கிறார். ஒபெலி.என் .கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

கவுதம் கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிற இந்தப்படத்தில் , பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஃபரூக்.ஜெ பாஷா ஒளிப்பதிவு , பிரவீன். படத்தொகுப்பு  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் .ஞானவேல் ராஜா  தயாரிப்பு.
 வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.  நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் சகலகலாவல்லவன் டி ராஜேந்தர் பேசினார்..
 “ நான் அமெரிக்கா சென்று என்னுடைய உடல்நிலை காரணமாக நான் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பிறகு எந்த கூட்டமாக இருந்தாலும்  நான் செல்வதில்லை. இங்கே  திரளாக கூட்டம். ஆனால் நான் இங்கு வரவேண்டும் என்று என் மகனுக்கு என் மீது நாட்டம். நான் வர மறுத்தால் என் மகனுக்கு வந்து விடுமோ வாட்டம், என லேசாக பார்க்க நினைத்தேன் ஒரு சின்ன நீரோட்டம் ஒரு மேலோட்டம்.
நான் வரவேண்டும் என்று எஸ்.டி ஆர். ரசிகர்களுக்கோ போராட்டம்…
இப்படியே நான் விட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவேன். விடியும் வரை கூட பேசுவேன். ஆனால் என் மனைவி உஷா ராஜேந்தர் விழாவிற்கு வந்திருக்கிறார்.
“நீங்க பேசாம தான் வரணும்”… ஏனென்றால் என் இதயம் அவள் !
என் உயிர் உள்ளவரை உஷா என நான் கரம் பிடித்த என் மனைவி. என் இதயம் உயிருள்ளவரை உஷாவிலே  வாழ்க்கையிலே வந்தது ஒரு உதயம். அதற்கு காரணம்  என் உயிர் உள்ளவரை என் இதயம். அவளால் வந்தது தான் என் வாழ்க்கையிலே சதயம். இந்த இதயம்.. உதயம்.. சதயம் என்னவென்று யாருக்கு தெரியவில்லை,
என்றாலும் நான் கண்டெடுத்த உதயமான என் உதயம் சிலம்பரசனுக்கு தெரியும். நான் வர மறுத்தேன். வெந்து தணிந்தது காடு படத்தின் விழாவிற்கு என் நண்பர் ஐசரி கணேஷ் அவர்கள் அழைத்தார். “நான் அப்போது தான் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தேன் என்னால் வர இயலாது நண்பா” என சொல்லி இருந்தேன். ஆனால் இந்த விழாவில் என் நண்பர் என்னை விடவில்லை. என்னுடைய இனிய நண்பர் யார் என்று கேட்டால் தனஞ்செயன்! தனம் என் கையைப் பிடித்து வருவது போல தனஞ்செயன் என்னை மேடைக்கு அழைத்து வந்தார்
இவை எல்லாவற்றுக்கும் மேலே இந்த விழாவிற்கு நான் வந்ததற்கு காரணம்  தமிழ்நாட்டில் பிறந்து ஆஸ்கார் வரை சென்று தமிழ் மண்ணின் பெருமையை, இந்த இந்திய நாட்டின் பெருமையை, மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மதத்தை பார்க்காமல் நான் மதங்களை பார்ப்பவன் அல்ல… நான் மனங்களை பார்ப்பவன்! நான் இனங்களை பார்ப்பவன் அல்ல இதயங்களை பார்ப்பவன்! நான் நிறங்களை பார்ப்பவன் அல்ல.. நெஞ்சங்களை பார்ப்பவன்! அப்படிப்பட்ட நான் அந்த ஆஸ்கர் வரை சென்று விட்டு வந்த இந்த ஆருயிர் தோழனை பாராட்ட. அவருக்கு ஒரு நினைவு பரிசை கொடுக்க வேண்டும் என சொன்னார்கள்.
எதைக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியாது. என் நினைவையே கொடுப்போமா? அவர் வாழ்க்கையில் கொண்ட கனவை கொடுப்போமா? இல்லை என் மகனோடு அவர் கொண்ட உறவை கொடுப்போமா?
 
வந்தேன் ஒரு வீணையை கொடுத்தார்கள். அந்த வீணையை பார்த்தேன் வெள்ளி… என் இதயத்தை தர நினைத்தேன் அள்ளி… அழைத்தவுடன் வந்தேன் துள்ளி… இந்த வீணையிலே பார்த்தேன் வெள்ளி… அதுவோ வீணை கொட்டுமே அது தேனை… உனக்கு என் கையால் தந்தேன் அந்த வீணை…
என் மனைவி சொன்னார் அதிகம் பேச வேண்டாம். முகத்தை மட்டும் காட்டுங்கள் அவருக்கு நினைவு பரிசை கொடுத்து விட்டு கீழே வந்து விடுங்கள் என்று சொன்னார். மனைவி சொல்லே மந்திரம் ஆனால் அதையும் மீறி இப்போது பேசுகிறேன் இது என் தந்திரம். எல்லாம் பேச வேண்டும் என என் மகன் சொல்லித் தந்தது தாரக மந்திரம். ஒன்று மேடையில் ஏறக்கூடாது இல்லை ஏறிவிட்டால் எனது ரசிகர்களை திருப்தி படுத்தாமல் நீங்கள் இறங்க கூடாது. என் தந்தைக்கு இருப்பது கம்பீரம் என் தந்தையின் கம்பீரம் அதை வைத்து தான் என் வீரம் என் மகன் கூட்டிய உரம்
அதனால்தான் அமெரிக்கா போய் நான் வந்து இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகன். நான் ஈன்றெடுத்த என் மகன். அவனுக்காக வராமல் வேற யாருக்காக நான் வருவேன். ?”என்று உணர்வு மிக்க மனதை வார்த்தைகளால் வடித்தார் சகலகலாவல்லவன்.
ஏஆர்.ரகுமான்சிலம்பரசன்டி.ராஜேந்தர்பத்து தல