இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜய் பூபதியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.தனது முதல் பட த்தின் நாயகி பாயல் ராஜ்புத்தையே செவ்வாய்க்கிழமை படத்துக்கும் கதாநாயகியாக்கியுள்ளார்.
தனது புதிய படத்தில் இருந்துதனது விரல் நுனியில் பட்டாம் பூச்சியை ஏந்தியபடி மேலாடை இல்லாத ‘ஷைலஜா’ என அவரது கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார். தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குனர் அஜய் பூபதி கூறுகையில்,“’செவ்வாய்கிழமை’ திரைப்படம் 90களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும்.
திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது.
ஆர் எக்ஸ் 100 படத்தின் சிந்து போல, ‘செவ்வாய்கிழமை’ ஷைலஜாவும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருப்பாள். தற்போது இப்படத்தின் 75 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி ஷெட்யூலை அடுத்த மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம். என்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவை தாசரதி சிவேந்திரா கவனிக்க,பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து வருகிறார்.