இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஜய், தனது தாய் ஷோபாவுடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது.
அப் புகைப்படத்தில் தனது வீட்டில் ‘லியோ’ கெட் அப்பில் இருக்கும் விஜய் சிகப்பு நிற சட்டையுடன் தாய் ஷோபாவின் கீழ் அமர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படமானது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபாவின் 50ஆவது திருமண நாளை ஒட்டி எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி: இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் அவரது பெற்றோருடன் பேசுவதில்லை, நேரில் சந்திப்பதில்லை என்பது வெறும் வதந்திகள்தான் என்பதை இந்த புகைப்படம் நிரூபித்துவிட்டதாக உற்சாகத்துடன் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.