லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்!

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் , ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் தனது 170 படத்திற்காக இணையவுள்ளார். இப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இதற்கிடையில் ரஜினிகாந்த் , தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள்நடிப்பில் உருவாகி வரும் லால்சலாம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முடித்து விட்டு,அதை கொண்டாடும்விதமாக லால் சலாம் படக்குழுவினருக்கு அவர் விருந்தும் அளித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு, விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் முஸ்லிம் பெரியவராக நடிக்கும் ரஜினி நீண்ட தாடி மற்றும் மீசை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது,