இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.லண்டன், துபாய் என உலகம் முழுவதும் விளம்பரம் செய்யப்படும் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷனானது முழுக்க முழுக்க தமிழிலேயே செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த சியான் விக்ரம், குந்தவை (திரிஷா), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) ஆகியோர் ஒன்றாக சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலில் நிறைய மாற்றங்களை மணிரத்தினம் திரைப்படத்திற்காக மாற்றியுள்ளார். அதன்படி இந்த மூவரின் சந்திப்பு இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.