மறைந்த இயக்குனர்,நடிகர் மனோபாலாவின் கடைசி தருணம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மனோபாலா ஒரு சேரில் அமர்ந்திருக்கும் நிலையில், அவரை சுற்றி அவரது மகன், மனைவி, உதவியாளர்கள் இருக்கின்றனர்.
அப்போது உதவியாளர் ஒருவர்,அவருக்கு சிறிது சிறிதாக ஸ்பூனில் சாதம் ஊட்டிய படி, ‘வாங்க சார் பாட்டு பாடலாம். நீங்க முதலில் ஆரம்பிங்க’ என கூறுகிறார்.
ஆனால் மனோபாலாவால் பேசவோ,பாடவோ முடியவில்லை. அவர்களை அமைதியாக பார்க்கிறார்.அவரைத் தொடர்ந்து மனோபாலாவின் மகன் ஹரிஷ் முருகன் பாடல் ஒன்றை பாட,கூடவே மனோபாலாவின் மனைவியும் சேர்ந்து மனம் உருக பாடுகிறார்கள் .
அதனையும் மனோபாலா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக அந்த வீடியோ நிறைவடைகிறது. பலரையும் நெகிழ வைத்துள்ள இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.