இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நேரும் கலவரம், அதிலேயே காதல், நட்பு, குடும்பம் மற்றும் துரோகம் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இராவண கோட்டம் உருவாகியுள்ளது.
இப்படம் 12 ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேசு நாடார் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் வழங்கப்பட்டுள்ள புகாரில், ”பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை சீமை கருவேல மரம் அரசியல், முதுகுளத்தூர் கலவரம் தொடர்பான காட்சிகளை மையப்படுத்தி தவறாக சித்தரிக்க முயலும் விரைவில் வெளிவர உள்ள இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதோடு, தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சாதி வன்மத்துடன் எடுக்கப்பட்டுள்ள இராவண கோட்டம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளன.