இவர் சிப்பிக்குள் முத்து தொடரில் நடிக்கும் போது உடன் நடித்த நடிகர் விஷ்ணுகாந்துடன் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்து,
இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் திருமணமும் செய்து கொண்டனர்.இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், இன்ஸ்டாகிராமில் இருந்து திடீர் என தங்களின் திருமண புகைப்படங்களை இருவருமே அதிரடியாக நீக்கிவிட்டனர்.
இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து,விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த மௌனம் வெறுமையானதல்ல, உண்மை மற்றும் பதில் நிறைந்தது என்று பதிவிட்டிருந்தார்.