பாலிவுட்டின் பன்முக திறமையாளர், முன்னணி நட்சத்திர நடிகர் நவாசுதீன் சித்திக் இப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் படத்திலிருந்து அவரது கேரக்டர் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நவாசுதீன் சித்திக் விகாஸ் மாலிக் என்ற மிகக் கொடூரமான வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தில் மனோக்யா எனும் பாத்திரத்தில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், டாக்டர் ரேணுவாக ருஹானி ஷர்மாவும், ஜாஸ்மின் வேடத்தில் ஆண்ட்ரியா ஜெராமியாநடிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, S.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். கேரி BH எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கிஷோர் தல்லூர் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
சைந்தவ் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது, இது அனைத்து தென் மொழிகளிலும், அத்துடன் இந்தியிலும் டிசம்பர் 22 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகிறது.