இந்நிலையில், ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது நிகழ்ச்சி இந்த வருடம் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இருநாட்கள் நடந்தது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்கினர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான, சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபங்கள் பங்கேற்றனர்.இவ்விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த விருதை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் அதே கேரக்டரில் பல ஆண்டுகளை கடந்து நடிப்பதற்கும் 4 மணிநேரம் மேக்கப் போடுவதற்கும் என்ன வித்தியாசம் என எழுப்பிய கேள்விக்கு ,”இந்த அனுபவம் சேனாபதி கேரக்டருக்கு மட்டுமில்லாமல், படத்தில் உழைத்துவரும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொருந்தும்.இந்தியன் படத்தை பார்க்காத இளம் ரசிகர்களுக்கும் இந்தப் படம் சிறப்பான அனுபவத்தை 100 சதவிகிதம் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்..