கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டபலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது நிகழ்ச்சி இந்த வருடம் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இருநாட்கள் நடந்தது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்கினர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான, சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபங்கள் பங்கேற்றனர்.இவ்விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கான், கமல்ஹாசன் இருக்குமிடத்திற்கு வந்து அவரை கட்டித் தழுவி தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்தார்.விழாவில் நன்றியுரை ஆற்றிய கமல்ஹாசன் அனைவருக்கும் நன்றி என தமிழில் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது. ஏஆர் ரஹ்மானும், தன்னுடைய கட்டை விரலை உயர்த்திக்காட்டி மகிழ்ச்சியை வெளிக்காட்டினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் அதே கேரக்டரில் பல ஆண்டுகளை கடந்து நடிப்பதற்கும் 4 மணிநேரம் மேக்கப் போடுவதற்கும் என்ன வித்தியாசம் என எழுப்பிய கேள்விக்கு ,”இந்த அனுபவம் சேனாபதி கேரக்டருக்கு மட்டுமில்லாமல், படத்தில் உழைத்துவரும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொருந்தும்.இந்தியன் படத்தை பார்க்காத இளம் ரசிகர்களுக்கும் இந்தப் படம் சிறப்பான அனுபவத்தை 100 சதவிகிதம் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்..