பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி. நடித்து இயக்கிய பிச்சைக்காரன் 2 திரைப்படம் கடந்த மே 19-ந் தேதி உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது.
எதிர்பார்த்ததை விட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், பிச்சைக்காரன் 2 படக்குழு செம மகிழ்ச்சியில் உள்ளனர்.இதையடுத்து விரைவில் பிச்சைக்காரன் படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும் விஜய் ஆண்டனி சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதிரடியாக நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை அழைத்து சென்று, அவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.
பிச்சைக்காரர்களுக்கு விஜய் ஆண்டனியே தன் கையால் பிரியாணியை பரிமாறி இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளையும் வழங்கி அவர்களின் பசியாற்றி மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
#BichagaduEmotionalJourney pic.twitter.com/ZNumFZOCG2
— vijayantony (@vijayantony) May 27, 2023