இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர்,
அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வந்த இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இரவுபகலாக நடந்து வந்த ஜெயிலர் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.
முன்னதாக லால் சலாம் படப்பிடிப்பில் இருந்த இருந்த ரஜினியை ஜெயிலர் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நெல்சன் அவசரமாக அழைத்ததாகவும், இதனால் ஏகத்துக்கும் டென்ஷனான ரஜினி லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பியதாகவும் சமூக வலைத்தளங்களால் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.