இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி நடிகை சரிதா,யோகிபாபு, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் பணியை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருந்தார்.
முதலில் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதால், மாவீரன் படத்தை ஒரு மாதம் முன்னதாக அதாவது ஜூலை மாதம் 14 தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு
சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் மாவீரன் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை .படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.