தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் அவருக்கு . பல மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படம் பெரும் திருப்புமுனை படமாக அமைந்தது. இந்தி படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா, ரன்பீர் கபூருடன் இணைந்து ‘அனிமல்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில்,ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக மேனேஜராக வேலைப்பார்த்து வந்தவர் ரூ.80 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்து வந்த இந்த மோசடி குறித்து தெரிய வந்ததும் ராஷ்மிகாமந்தனா, உடனடியாக அவரை வேலையை விட்டு நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.