இந்நிலையில் ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதி,கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரான மகிழ்ச்சியான செய்தியை, ராம்சரணின் தந்தை நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து, கர்ப்பிணியான உபாசனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வளைகாப்பு நடந்தது.இந்நிலையில், இன்று காலை ராம்சரணின் மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
ராம்சரண் மற்றும் உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடமிருந்தும், உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்து வருகிறார்கள். எங்களின் மகிழ்ச்சியை தங்களுடையதாக உணர்கிறார்கள். இவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக. வாழ்த்தியதற்கும், அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பிறப்பதற்கும் முன்னே நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. தொழில்துறையில் ராம்சரண் அடைந்த வளர்ச்சி.. அவரது சாதனைகள்…
வருண் தேஜின் நிச்சயதார்த்தம்.. என பல விசயங்களை குறிப்பிடலாம். கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களில் எங்கள் வாழ்வில் நல்ல விசயங்கள் நடந்திருக்கின்றன.
இவை அனைத்திற்கும் பிறந்த பெண் கொண்டிருக்கும் நேர்நிலையான ஆற்றலே காரணம் என நான் உணர்கிறேன்.
எங்கள் குடும்பம் ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை என்பது ஆஞ்சநேயருக்கு உகந்த நாள். மேலும் இந்த நல்ல நாளில் குழந்தை பிறந்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் குழு பிரசவத்தை குறைபாடற்ற முறையில் கையாண்டது. இதற்காக அனைவருக்கும் நன்றி.” என்றார்.
மேலும் சிரஞ்சீவின் சகோதரர் நடிகர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் ராம் தேஜ் ஆகியோரும் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிகளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ராம்சரனுக்கு ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.