இவர்களுடன் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ரெட்ரோ ஸ்டைலில் பீரியட் ஆக்ஷன் ஜானர் படமாக உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி படம் வெளியாகும் என்கிறார்கள்.
இப்படம், சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தில் பீரியட் படமாக உருவாகி வருகிறது. 1940களில் இந்தப் படம் பயணித்து வருகிறது.
இந்நிலையில் இப் படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் கடந்த 1990 ம் ஆண்டுகளில் நடப்பது போல அடுத்த பாகமும், தற்போதைய காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாவது பாகமும் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.