இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் கன்னட நடிகர்களில் ஒருவராவார். நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
மற்றும் ஒரு கர்நாடக மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும், 9 வயது நிரம்பிய சாக்ஷி, மெட்டாஸ்டேடிக் அல்லாத ஆஸ்டியோசர்கோமா எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏழ்மையான இந்த சிறுமியின் ஆசையைப் பற்றி அறிந்த நடிகர் சுதீப், குழந்தையை நேரில்
சந்தித்து உரையாடி, அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
தனது கனவு நாயகன் சுதீப் அவர்களை நேரில் சந்தித்ததில் குழந்தை சாக்ஷி உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் உள்ளார்.