கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகளான ஷனாயா கபூர் நடிகர் ரோஷன் மேகாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவருடன் அறிமுகமாகும் சஹ்ரா எஸ். கான் எனும் நடிகையும் பீரியாடிக் பகுதியில் ரோஷன் மேகாவிற்கு ஜோடியாக வீரம் செறிந்த இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இவர் முன்னாள் நட்சத்திர நடிகையான சல்மா ஆகாவின் மகளாவார்.
இயக்குநர் நந்த கிஷோர் பேசுகையில், ” ஷனாயா மற்றும் சஹ்ரா இருவரும் தோற்றத்திலும், திறமையிலும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறார்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள் மட்டுமல்ல கடினமாக உழைக்கும் இளம் நடிகர்கள். ஒரு இயக்குநராக என்னை பொருத்தவரை நான் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன். நடிகர்கள் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட எங்களின் கூட்டு பங்களிப்பை நாங்கள் அனுபவிக்க ஆவலாக உள்ளோம்” என்றார்.
இந்த படத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கும். கதைக்களம் என்னுடன் தங்கி இருக்கும். இந்த திரைப்படம்- அனைத்து நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைகளை கொண்டுள்ளது..
இது கனவு நனவானது போன்றதாகும். மோகன்லால் சாருடன் விருஷபாவில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்” என்றார்.
நடிகை சஹ்ரா எஸ். கான் பேசுகையில், ” விருஷபா எனது முதல் பான் இந்திய வெளியீடாகும்.
இது ஒரு கனவு நனவானது போன்றது. மோகன்லால் சார் போன்ற நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களை கொண்ட இப்படத்தில் இடம்பெற்றிருப்பதும்,
அவருடன் திரையில் எங்களது நடிப்பை பகிர்ந்து கொள்வதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
நான் இப்படத்தின் பீரியாடிக் பகுதியில் நடிக்கிறேன். ரோஷன் உடன் ஜோடியாக நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ” என்கிறார்.
. நந்தகிஷோர் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை ( ஏ வி எஸ் ஸ்டுடியோஸ்) அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி , ஜூஹி பரேக் மேத்தா, சியாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் மூவிஸ்) தயாரித்துள்ளனர்.