இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னையில் நடந்தது. நகைச்சுவை நடிகர் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த சீரிஸ் குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், “சட்னி – சாம்பார்’ சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் தொடங்கியிருக்கிறோம்.
நடிகர் யோகிபாபு கூறுகையில்..,
“சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக “சட்னி சாம்பார்” இருக்கும்” என்றார்.
நடிகை வாணி போஜன் கூறுகையில்,
“டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்” என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசன்னா குமார் கவனிக்க, அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். இப்படத்துக்கான வசனத்தை எழுத்தாளர் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார்.