இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறியதாவது:”ஒரே நேரத்தில் சினிமா தியேட்டரிலும், ஒ டி டி யிலும் யோக்கியன் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அதுவும் என்னுடைய ஏ கியூப் மூவிஸ் ஆப்பில் முதன் முறையாக வெளியாகிறது.
. ஆனால் இப்போது தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய பேனர் படங்களுக்கு மட்டுமே படம்.பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவ தில்லை.அவர்களை குற்றம் சொல்ல முடியாது.
தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான் ஏ கியூப் மூவிஸ்.ஆப் நான் தொடங்கினேன். கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் எப்படியிருக்கிறான் என்பதை இப்படம் மையமாக கொண்டு இக்கதை உருவாகி யுள்ளது. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிப்பேன் என்பதை இப்படத்தில் காணலாம்”.இவ்வாறு ஜெய் ஆகாஷ் கூறினார்.