மொழி பேதங்களைக் கடந்து நடிகர் துல்கர் சல்மான் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள பான் இந்திய நட்சத்திரமாக வளர்ந்துளார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு அடுத்து தன்னுடைய பான் இந்திய படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்த்துள்ளார்.
வெங்கி அட்லூரி நடிகர் தனுஷூடன் ’சார்/வாத்தி’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய சமூகப் பொறுப்பைக் கொண்ட இயக்குநராக அவரது நற்பெயரை உயர்த்தியது. இதுமட்டுமல்லாது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலைக் கொடுத்து, அவரை பான் இந்திய இயக்குநராக மாற்றியுள்ளது. இப்போது அவரது அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. மிகப் பெரிய பொருட்ச் செலவில் துல்கர் சல்மான் நடிப்பில் இந்தப் படம் உருவாகிறது எனவும், இந்த முறையும் மிக முக்கியமான கதைக்கருவையே வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
‘சார்/வாத்தி’ படத்திற்கு இசையமைத்த தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்றொரு தேசிய விருது பெற்றவரான நவின் நூலி படத்தொகுப்பை கையாள்கிறார். மேலும் மற்ற விவரங்களைப் படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது.