சமீபத்தில் தனது 82 வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் பாரதிராஜா தனது மகன் மனோஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மார்கழித்திங்கள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இதன் மூலம் 31 வருடங்களுக்கு பின், அதாவது கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ’நாடோடி தென்றல்’ படத்திற்கு பின்னர் தற்போது பாரதிராஜாவுடன் இளையராஜா மீண்டும் இணைந்துள்ளார். இந்நிலையில் சென்னை வீட்டில் ஓய்வெடுத்து வரும் பாரதிராஜாவை அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் வைரமுத்து நேரில் சென்று சந்தித்து, எழுந்து வா இமயமே என்ற தலைப்பில் அவரை வாழ்த்தி கவிதை ஒன்றை எழுதி பாடியுள்ளார்.இந்த பாடல் வீடியோவை வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில்,கவிஞர் வைரமுத்து பாரதிராஜாவிடம்,”நான் அண்மையில் பார்த்ததை விட நீங்க ரொம்ப நன்றாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் நலம் தேறி விட்டது என்பதை உங்கள் முகம் சொல்லுகிறது. நான் உங்களுக்கு ஒரு வாழ்த்து கவிதை கொண்டு வந்து இருக்கிறேன். இந்த வாழ்த்து கவிதையை கேட்டு நீங்கள் ஆனந்தம் அடைய வேண்டும் என்று கூறி, நாயகன் படத்தில் இளையராஜா இசையமைத்து பாடிய, ‘தென் பாண்டி சீமையிலே’ என்ற பாடலின் மெட்டில் ‘ தென்மேற்கு சீமையிலே. தேனி நகர் ஓரத்துல பால் பாண்டியாக வந்தான் பாரதிராஜா. பிறந்த இடமோ கள்ளிக்காடு என தொடங்கும் வரிகளுடன் கவிஞர் வைரமுத்து பாடும் பாடல் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.