இந்நிலையில் இது குறித்து தயாரிப்பு தரப்பு ,”சில தீய சக்திகள் இந்த வதந்திகளைப் பரப்புகின்றன, ஏனென்றால் எங்கள் படம் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் தியேட்டர் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து இப்படத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். சிறந்த சினிமா அனுபவத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் என தயாரிப்பு தரப்பு விளக்கமளித்திருக்கின்றனர். விரைவில் இப்படத்தின் டீசரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவு செய்துள்ளார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.