.விக்னேஷ் சிவன் நீக்கம், தயாரிப்பு அலுவலகத்தில் சோதனை, கதாநாயகி மாற்றம் என பல பஞ்சாயத்துகளைக் கடந்து,இம் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,அஜித்தும் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் தனது பைக் சுற்று பயணத்தை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார்.
இதனால் படத்தின் படப்பிடிப்பு நிச்சயம் தொடங்கிவிடும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில்,அஜித் குமார் மீண்டும் வெளிநாடு சென்று விட்ட புகைப்படம் ஒன்றை ஷாலினி அஜித் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 5ம் தேதி துவங்கி, ஒரே கட்டமாக 100 நாட்களில் நடத்தி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.