பின்னர் மீண்டும் உடல்நலக்குறைவு, கொரோனா தாக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார் ரஜினிகாந்த்.இந்நிலையில் ஜெயிலர் மற்றும் லால்சலாம் படப்பிடிப்புகள் முடிவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த் மாலத்தீவு சென்று வந்தார். தற்போது ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி மீண்டும் இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
சுமார் ஒருவார காலம் பயணத்தை திட்டமிட்டுள்ள ரஜினி, பாபாஜி குகை, பத்ரிநாத், கேதர்நாத் உள்ளிட்ட தலங்களுக்கு செல்ல உள்ளார் . மேலும், இந்த முறை தனது மகள்கள் யாருமின்றி, தனியாக இமயமலைக்கு ரஜினி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ரஜினிகாந்த் இன்று இரவு அல்லது நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து இமய மலை புறப்பட்டு செல்வார் என்கிறார்கள்
இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஜெயிலர் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் பார்த்து ரசித்துள்ளதோடு இயக்குனர் உள்ளிட் ட படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார்.