மலையாள இயக்குனர் சித்திக் (வயது 69) உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் நேற்று நிமோனியா மற்றும் கல்லீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார் . அவருக்கு வயது 69. சித்திக் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.