யுவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் அவரது 157 வது படமாக இருக்கும்.
சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு சுவரொட்டியில் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் போன்ற பஞ்சபூதங்கள் (இயற்கையின் ஐந்து கூறுகள்) நட்சத்திர வடிவத்தில், திரிசூலத்துடன் கூடிய ஒரு பொருளில் சூழப்பட்டுள்ளது.