இப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில்,உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளபுதிதா படமொன்றிலும் , வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணையவுள்ளார்.இ ந்த இரு படங்களிலும் ஒரே நேரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.லோகேஷ் கனகராஜ்
தனது இரும்புக்கை மாயாவிபடத்தின் அப்டேட் ஸ்கிரிப்டை சூர்யாவிடம் கூறியதாகவும்,கதையை மிகுந்த ஆர்வமுடன் கேட்ட சூர்யா மிகவும் இம்ப்ரஸ் ஆனதாகவும் கூறப்படுகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.