மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்,இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.
எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இந்தப் படத்தை ‘புக்கர் பரிசு’ (2022) பெற்ற ஷெஹான் கருணாதிலகா இணைந்து எழுதியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது.
விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு, இயக்குநர் ஸ்ரீபதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஒட்டுமொத்தத் திரையுலகமும், ஊடக உலகமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும், உணர்ச்சிப்பூர்வமாக நம்மை உடனடியாக இணைக்கும் ‘800’ படத்தின் மிகச்சிறந்த டிரெய்லரைப் பற்றிப் பாராட்டி வருகின்றனர். முத்தையா முரளிதரனாக வரும் மதுர் மிட்டலின் திரை பிரசன்ஸ், ஆர்.டி.ராஜசேகரின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரானின் இசை ஆகியவை இந்த டிரெய்லரின் மிகப்பெரிய பலம்..தமிழில் உருவாகி இருக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.