திரைக்கு வராத கதை லெஸ்பியன் கதையா !-இயக்குனர் விளக்கம்!!

முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே நடித்து உள்ள  புதிய படம் ‘திரைக்கு வராத கதை’ பேய் அமானுஷ்யங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகியுள்ள இதில் . நதியா, இனியா, கோவை சரளா, ஈடன், ஆர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை மலையாள இயக்குனர் துளசிதாஸ் இயக்கி உள்ளார். கே.மணிகண்டன் தயாரித்து உள்ளார். இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. இந்நிலையில்,  இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த படக்குழுவினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘யு’ வழங்க மறுத்து விட்டதாகவும் ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறி ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து இயக்குனர் துளசிதாஸ் கூறும்போது,  இதில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர். ஒரு ஹாரர், திகில் நிறைந்த படமாக இதை உருவாக்கியிருக்கிறேன்.தணிக்கை குழுவினர் என் படத்தை பார்த்து மிகவும் பாராட்டினார்கள். மற்றபடி, ஆபாச காட்சிகள் இருப்பதாக வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. என் படத்தில் அப்படிப்பட்ட ஆபாச காட்சிகள் ஏதும் இல்லை.இது லெஸ்பியன் கதையும் அல்ல! ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீது அன்பு வரலாம். அது அதீதமான அன்பாக கூட இருக்கலாம். இதுபோன்ற காட்சிகள் தான் படத்தில் உள்ளன.  ஹாரர் காட்சிகள் அதிகம் இருப்பதால் தான் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.என்கிறார்.
Comments (0)
Add Comment