நிகழ்வில் நடிகை தான்யா ஹோப், “‘வெப்பன்’ படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் குறித்து அதிகம் நான் இங்கு சொல்ல முடியாது. நல்ல கான்செப்ட், வித்தியாசமான கதை. படம் பார்க்குபோது உங்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் குகன், தயாரிப்பாளர் மன்சூர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”
நடிகர் ராஜீவ் கோவிந்த் பிள்ளை, “தென்னிந்தியாவில் இது போன்ற ஒரு சூப்பர் ஹுயூமன் யுனிவர்ஸ் கதை உருவாவது இதுதான் முதல் முறை என்பேன். அதை இயக்குநர் தன் பார்வையில் அழகாக எடுத்து வந்துள்ளார். இந்த கான்செப்ட்டை இங்கு கொண்டு வந்ததற்கே இயக்குனருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இதில் எனக்கும் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரம் கொடுத்துள்ளார். சத்யராஜ் சார் சண்டை காட்சிகளை சிறப்பாக செய்துள்ளார். அவர் ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து எனக்கே பயமாக இருந்தது. படத்தில் எல்லாருமே சிறப்பாக செய்துள்ளார்கள். உங்கள் ஆதரவு படத்திற்குத் தேவை”.
ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், “இயக்குநர் குகன் இந்தக் கதை பற்றி சொன்ன போது ‘இது ஒரு 100 கூடி ரூபாய் பட்ஜெட் படம் போல உள்ளது. எப்படி உருவாக்குவீர்கள்’ என்றுதான் கேட்டேன். அவருடைய இந்த கதையில் நான் கெட்டவனாக இருப்பதில் மகிழ்ச்சி. கட்டப்பா சத்யராஜ் சாருடன் நடித்திருக்கிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்”.
நடிகர் சத்யராஜ், “இது போன்ற கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டீம், தயாரிப்பாளர்கள் இவர்கள்தான் ரியல் ஹீரோஸ். இதுபோன்ற படங்களுக்கு தயாரிப்பாளர் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செலவு செய்ய வேண்டும். ‘பாகுபலி’படத்தின் போது தயாரிப்பாளர் சோபுவை பார்த்து பிரபாஸ் என்னிடம் விளையாட்டாக, ‘பாருங்க சார், யாரோ பணம் போட்டு படம் எடுப்பது போல ஜாலியாக வந்து போகிறார்’ என்று சொல்வார். அதே போலவே மன்சூர் சாரும் உள்ளார். வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை எல்லாரும் சிறப்பாக செய்துள்ளனர்” என்றார்.
தயாரிப்பாளர் மன்சூர் பேசியதாவது, “இந்தப் படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். படத்தை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.