தனுசுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஏராளமான கன்னட படங்களில் நடித்துவரும் ரம்யா, காங்கிரஸில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.
இவர் எம்பியாகவும் பதவி வகித்தார்.இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக வதந்தி வேகமாக பரவியது. இது குறித்து அதிர்ச்சியடைந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா தான் தற்போது ஜெனீவாவில் நலமுடன் இருக்கிறேன்
வதந்திகளை நம்ப வேண்டாம் என சித்ரா சுப்ரமணியம் என்பவருடன் உணவருந்தும் புகைப்படத்துடன் அவர் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.