கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மற்ற நடிகர்,நடிகைகளை தேர்வு செய்யும் பனி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
‘ ரைஸ் டு ரூல்’ என்ற டேக் லைனோடு அறிவிக்கப்பட்டுள்ள பக்கா ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்துக்காக கமல்ஹாசன், மிலிட்டரி உடையில் அமெரிக்காவில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார்.
விதவிதமான எந்திர துப்பாக்கிகளை அவர் மிக சாதாரணமாக கையாளும் வீடியோ ஒன்றை ‘ராஜ்கமல்’ பட நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.