மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில்,லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்துக்கு ‘ஆர் யூ ஓகே பேபி’.என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சமுத்திரகனி மற்றும் அபிராமி நாயகன், நாயகியாக நடிக்க இவர்களுடன் ஆடுகளம் நரேன்,அசோக், மிஸ்கின், வினோதினி, ரோபோ சங்கர் பாவல் நவநீதன், முல்லையரசி உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கதைக்களத்தில் அதே களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில்,”நான் பார்த்த உண்மை சம்பவம் ஒன்றில் அடிப்படையில் ஒரு குழந்தையை தத்து எடுப்பதில்.அல்லது தத்து கொடுப்பதில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக, ஒரு குழந்தைக்காக போராடும் இரண்டு தாய்களின் மனநிலையை பற்றி பேசும் படமாகவும் இது இருக்கும்,இந்தப் படம் ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களைப் பற்றிய விவாதமாக இருக்கும். இது சொல்லப்பட வேண்டிய கதை. இப் படத்தில் ஒரு பாடல்தான். அதை இந்தப் படம் ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களைப் பற்றிய விவாதமாக இருக்கும். இது சொல்லப்பட வேண்டிய கதை. இந்தப் படத்துக்கு இளையராஜா நிகழ்த்திய மேஜிக்கை நேரில் உணர்ந்தேன். ஒரு பாடல்தான். அதை அவரே எழுதி இசையமைத்துள்ளார் என்கிறார்.