ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படம் இந்த 15-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள்களை முன்னிட்டு திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது படக்குழு தரப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக இப் படத்தின்வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து இப் படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த போது,இப்படத்தின் VFX வேலைகள் சரிவர முடியாத காரணத்தினால் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளிப்போகிறது என்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று, விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’, ஜெயம்ரவியின் ‘இறைவன்’, ஹரீஷ் கல்யானின் ‘பார்கிங்’, சித்தார்த்தின் ‘சித்தா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.