இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவங்குவதாக படத்தின் இயக்குநர் வசிஷ்டா அறிவித்துள்ளார். சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
“மெகா படத்திற்கு ஒரு மெகா தொடக்கம் ‘MEGA157’ ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்குகிறோம்! விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு சினிமா சாகசத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளோம்! @KChiruTweets @UV_Creations @NaiduChota,” என்று வசிஷ்டா ட்வீட் செய்துள்ளார், அத்துடன் அவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி, அவரது தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருடன் இணைந்த ஒரு பிரத்யேக புகைப்படத்தையும் இந்த டிவிட்டுடன் பகிர்ந்துள்ளார்.
இம்மாபெரும் பிரமாண்ட படைப்பில் பங்கேற்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.