சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ,நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது.
உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தை தயாரித்த சன்டிவி நிறுவனம் படத்தின் நாயகன் ரஜினிகாந்திற்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கியது.. பெரிய தொகை ஒன்றும் அவரு க்கு காசோலையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ,ஜெயிலர் வெற்றிவிழா நடைப்பெற்றுள்ளது. இதில் படக்குழுவினர் 200 பேருக்கு 2 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.