ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து அடுத்தாக ரஜினிகாந்த், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்தது வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து, ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் ஆரம்ப கட்ட கணிகள் நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 19ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில்,ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சன்டிவி தயாரிப்பு தரப்பு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.இப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும். மேலும் லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக தலைவர் 171 படத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் விலகியதாக தகவல்கள் வெளியானது. தற்போது வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.