நடிகர் சிம்பு மீது ‘ஏஏஏ’ படவிவகாரம் தொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத படத்தயாரிப்பளார் மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி சிம்புவுக்கும்,
தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக நடிகர் விஷாலுக்கும்,
நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக நடிகர் தனுசுக்கும் ,
நடிகர் அதர்வா படம் தயாரிப்பதாகவும் நடிப்பதாகவும் கூறி ரூ.6.10 கோடி வரை ஏமாற்றியதாக படத் தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வாவுக்கும் ரெட் கார்ட். வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.