தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம்சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,
தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார். சென்னையில் உள்ள மூன்று வெவ்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 35 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
என்னுடைய நண்பர் மூலமாக இணைந்தவர் தான் இயக்குநர் விக்ரம். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் ஐடி துறையில் பணியாற்றிய அவர் சினிமா மீதான ஆர்வத்தால் நடிப்பு மற்றும் டைரக்சனில் இறங்கியுள்ளார். இரண்டு மூன்று படங்களில் நடித்த ஓரளவு பிரபலமான ஹீரோக்கள் கூட எங்களது புதிய நிறுவனத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டினர். அதனால் புது முகங்களை வைத்து படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினோம்.
தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே படம் பார்ப்பவர்களை கதைக்குள் இழுத்து சென்றுவிடும். நான் அடிப்படையில் ஹாலிவுட் இயக்குநர் ஹிச்காக் படங்களை விரும்பிப் பார்ப்பவன். குறிப்பாக அவர் தனது பல படங்களை ஒரு வீட்டிற்குள்ளேயே, அதற்குள் உள்ள மனிதர்களை வைத்து உருவாக்கி இருப்பார். அதே பாணியில் தான் இந்த படமும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னையில் முக்கிய பகுதியில் உள்ள, சீரியலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வீட்டை செட் ஒர்க் அமைத்து முற்றிலுமாக மாற்றி படப்பிடிப்பை நடத்தினோம். அந்த வீடு இன்று பல சீரியல்களில் இடம் பெற்றிருந்தாலும் எங்களது படத்தில் முற்றிலும் ஒரு புதிய இடமாக காட்சியளிக்கும். கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.
படத்தில் அதிக காட்சிகளில் மது பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்வதற்கு அப்படிப்பட்ட காட்சிகள் தேவைப்பட்டது. இனிவரும் படங்களில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வோம். அதேசமயம் எந்த ஒரு மெசேஜையும் இந்த படத்தின் மூலமாக நாங்கள் வலிந்து சொல்லவில்லை.
இந்த படத்தை தயாரிக்க மிக முக்கிய காரணம் விக்ரம் கூறிய கதை மேல் இருந்த நம்பிக்கைதான். இது முற்றிலும் புதிய வகை சினிமா என்பதால் புதியவரான விக்ரம் இதை திறம்பட கையாண்டு உள்ளார். படம் பார்த்த பலரும் இந்த படத்தின் காட்சிகளும் வசனமும் ஃப்ரெஷ்ஷாக இருப்பதாக பாராட்டினார்கள். இந்தியாவின் “ஹேங் ஓவர்” படம் போன்று இதை உருவாக்கியுள்ளோம் என்று சொல்லலாம்.
சமீப காலமாக இயக்குநர் நெல்சன் போன்றவர்கள் டார்க் காமெடிக்கு ஒரு பாதை போட்டு கொடுத்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற வைத்துள்ளனர். இந்த படமும் டார்க் காமெடி கலந்த கிரைம் திரில்லராகத் தான் தான் உருவாகி உள்ளது. ” என்கிறார்.