நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை ஜேசன் சஞ்சய் கவனித்து வருகிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்தில் அவரின் முதல் ஹீரோ யார் என்பது குறித்த பட்டியலில் விஜய் சேதுபதி துருவ் விக்ரம் உள்ளிடவர்களின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில்,இப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதியும் இல்லை, துருவ் விக்ரமும் இல்லை என்றும்,அவரின் முதல் பட ஹீரோ. ’டாடா’ படத்தின் நாயகன் கவின் தான், என்றும்,இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்
.இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.