இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கணவர் ரவீந்தர் சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அவரது மனைவியும் நடிகையுமான மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,”என்னில் புன்னகையை வரவழைப்பதை நீங்கள் தவறுவதே இல்லை.அந்த அன்புக்கு காரணம் என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை தான் . இங்கே என்னை விட நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை உங்களை நேசிக்கிறது. அதே அன்பை பொழிகிறது. முன்போல் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்றும் அன்பாக இருப்பேன்’ என்று மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்