ஜாமினில் வந்த கணவர் குறித்து நடிகை மகா லட்சுமி உருக்கம்!
திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக ஏமாற்றி ரூ.15 கோடி பண மோசடி செய்ததாக படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கணவர் ரவீந்தர் சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அவரது மனைவியும் நடிகையுமான மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,”என்னில் புன்னகையை வரவழைப்பதை நீங்கள் தவறுவதே இல்லை.அந்த அன்புக்கு காரணம் என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை தான் . இங்கே என்னை விட நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை உங்களை நேசிக்கிறது. அதே அன்பை பொழிகிறது. முன்போல் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்றும் அன்பாக இருப்பேன்’ என்று மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்