இப்படத்தை அபிஷேக் நாமா இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் இறுதியில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் மணிமேகலா எனும் கதாபாத்திரத்தில், வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மாளவிகா நாயர் நடிக்கிறார். இப் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
இப் படத்தில் நாயகன் நந்தமுரி கல்யாண் ராம், மிகவும் கடினமான ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக நடிக்கிறார்.ஸ்ரீகாந்த் விசா குழுவினர் இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர்.ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது..