நவம்பர் 20–28தேதியில்கோவாவில் நடக்கும் உலகதிரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது.இந்திய மொழிகளில் பங்குபெற்ற408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. “காதல் என்பது பொதுவுடமை ” இது ஒரு நவீன காதல் கதை.
இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள் , மனஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறு ஒரு கோணத்தில் இந்த திரைப்படம் பேசுகிறது.
இப்படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநர் ஜியோ பேபி வழங்க , மேன்கைன்ட்
சினிமாஸ், நித்திஸ் புரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து
தயாரித்துள்ளனர்.